குடி தண்ணீருக்கான உலகப் போர் வெடிக்குமா?

peoplenews lka

குடி தண்ணீருக்கான உலகப் போர் வெடிக்குமா?

தண்ணீருக்கான குழப்பங்கள் அல்லது போராட்டங்கள் இன்று நேற்று அல்ல, 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உருவாகி உள்ளது என்பதையே பல வரலாற்றுச் சான்றுகள் எமக்கு உணர்த்துகின்றது. இதில் முக்கிய விடயம் என்னவன்றால்  உவர் அல்லது கடல் நீருக்கான குழப்பங்களை விட நன்னீர் அல்லது குடிநீர் தொடர்பான போராட்டங்களே அதிகமாக அமைந்துள்ளன.

நன்நீர் பாவனை மனிதனின் அனைத்து செயற்பாடுகளிலும் பின்னிப்பிணைந்துள்ளது. இன்று விஞ்ஞானத்தின் அதீத வளர்ச்சியில் கட்டுண்டுள்ள இந்த உலகத்தில் கூட 11 % க்கும் அதிகமான மக்கள், அதாவது 738 மில்லியன் அளவிலான மக்களுக்கு நாளாந்தாம் உரிய குடிநீர் அற்று அவதிப்படுகின்றார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை. குடிநீருக்குத் தட்டுப்பாடு உலகின் பல்வேறு நாடுகளில் வைரஸ் போல் பரவ ஆரம்பித்துவிட்டது என்பதையே பல்வேறு அண்மைய ஆய்வுகள் எமக்கு எடுத்துக்காட்டுகின்றது.

 

மத்திய கிழக்கு நாடுகளில் நிற்சமாக குடிநீருக்கான போராட்டக்களம் அதிகம் உள்ளது என பொருளியல் மற்றும் அரசியல் சார்ந்த அறவியலாளர்கள் எடுத்துரைக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் சீனா , இந்தியா உட்பட பல நாடுகள் தணீருக்கான போரட்டகளை எல்லைகளில் ஏற்படுத்தலாம் என்ற எடுத்துக்காட்டல்களும் முன்வைக்கப்படுகின்றது. ஏனெனில் தரவுகளின் அடிப்படையில் 300 க்கும் அதிகமான அணைகள் பல நாடுகளின் எல்லைகளில் பகிர்ந்து பயன்படுத்தப்பட்டுகின்றன.

 

இந்த அணைகள் கூட சில சந்தர்ப்பங்களில் மிகப் பாரிய பேரழிவு ஆயுதமாக பயன்படுத்தப்படலாம் என்ற சந்தேகங்களும் வலுப்பெற்று வருகின்றது. அண்மைக்காலமாக சீனா அதிகமான அணைகளை கட்டிவருகின்றது. இன்று சீனாவில் 23,841 பெரிய அணைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவைகள் உலகில் உள்ள பாரிய அணைகளில் 41% ஆன பங்காகும். இதில் பெரும்பாலானவை 2000 ஆண்டுக்கு பின் உருவாக்கப்பட்டவையாகும். இதைவிட உலகளாவிய ரீதியில் சீனா 304 அதிகமான பாரிய நீர்த்தேக்கங்களை அந்தந்த நாடுகளில் உருவாக்கிவருகின்றது. அதில் 34 % அதிகமானவை தனக்கு அண்மையில் இருக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலாகும். இன்று லாவோஸ் நாடு தன்னை “ battery of Asia” என்று அழைத்துக்கொள்கின்றது. லாவோஸ் மற்றும் மியன்மாரில் சீனாவினால் அமைக்கப்படுள்ள பாரிய அணைகள் மூலம் மின்சாரம் உற்பத்தியாக்கப்பட்டு மீண்டும் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

 

சீனாவின் இந்தப் பிரமாண்டம் இன்று கம்போடியா, தாய்லாந்து மற்றும் வியட்னாம் போன்ற நாடுகளில் வாழும் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நாடுகளில் சீனாவினால் அமைக்கப்படுள்ள பாரிய நீர்த்தேக்கங்களால் நீர் ஓட்டம் சாதாரண விவசாயகளின் நிலங்களை அடைவதை தடுத்துள்ளது. இதனால் பாரியளவில் அந் நாடுகளில் விவசாயிகள் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.

 

இன்று சீனா அமைப்பதற்கு திட்டமிட்டுள்ள மிகப் பாரியளவிலான நீர்த்தேக்கம் இந்தியாவின் எல்லையில் உள்ள அருணாட்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள தீபேத்திலாகும். பாரபுத்திரா ஆற்றினை இடைமறித்து அமைக்கப்படவுள்ள இந்த அணை இந்தியாவையும் பங்களாதேசத்தையும் சற்றே மிரள வைத்துள்ளது.

 

இந்தியா உலக சனத்தொகையில் 17 % தன்னகப்படுத்தியிருந்தாலும் வெறும் 4 % மாத்திரமே நீர்கொள்ளவினை உலக ரீதியில் வைத்துள்ளது. அதே போல் சீனவும் 20 % உலக சனத்தொகை பெறுமானம் கொண்டிருந்தாலும் 7 % நீர் வளங்கலையே உலக ரீதியில் தனகப்படுத்தியுள்ளது. இந்த தரவுகள் தான் நன்நீர் ஆயுதமாகும் என்ற வாதத்திற்கு வலுச் சேர்க்கின்றது.

 

ஆம் சீனாவின் இந்த பாரிய நீர் தேக்கத்திட்டங்கள் இந்தியாவின் ஆசாம் மானிலம் மற்றும் பங்களாதேசம் ஆகிய இடங்களில் வெள்ளப் பெருக்குகளை ஏற்படுத்தவும் வரட்சியினை ஏற்படுத்தவும் ஆயுதமாகலாம் என அமரிக்கா உட்பட பல உலக நாடுகளின் ஆய்வுகள் கருத்து தெருவிக்கின்றன.

 

இது இவ்வாறு அமைய இன்று இலங்கை 90% குடி நீர் வழங்கலை தன்னகத்தே அடைந்துள்ளது. நிலத்தடி நீர் வழங்கல் மூலம் இலங்கையில் 80% மக்கள் பயனடைகிறார்கள் என்பதே உண்மை. 20 அணைகளையும் 104 ஆறுகளையும் தன்னகத்தே வைத்திருக்கும் இலங்கையின் உண்மையான செல்வம் நிலத்தடி நீர். இந்த தண்ணீர் தான் தரமானதாகவும் நிற்சயமாக எமது உடலினை பாதுகாக்க காத்திருக்கும் மருந்தாகவும் அமைவதற்கான காலம் நெருங்கி வருகின்றது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இடம்பெறும் மலம் அகற்றல் பணிகளை முறைப்படுத்தினால் நிலத்தடி நீர் அமிர்தமாகும் என்தே உண்மை.

 

இலங்கையில் தங்கம் இல்லை பெற்றோலியம் இல்லை அதை விட மிக மிகப் பெறுமதிவாய்ந்த மருந்தாகும் குடிநீர் நிலத்துக்குள் உள்ளது என்பதை இலங்கை அறியவில்லை அல்லது அறிந்ததை மறைக்கின்றது. ஆனால் இதனை உலகத்தின் யாம்பவாங்கள் அறிந்துள்ளனர் என்பதே மறைக்கப்பட்டுள்ள நியம்.

Share on

தேஜா பதிவுகள்

peoplenews lka

அனுமதியின்றி ட்ரோன் கமராவினை இயக்கிய 2 பேர் கைது......

விக்டோரியா அணை, விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் 4 ஆவது இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை.. Read More

peoplenews lka

இந்திய பெருங்கடல் இன்று சீன பெருங்கடலாக மாறுகிறது...

சீனா மிகப் பெரிய தேசம். உலகில் அதிகூடிய சனத்தொகை உடைய நாடு. மிக நீண்ட வரலாற்றுப் பின்னணி உடைய நாடு. இன்று மிகத் திடமான பொருளாதாரப் பின்னணியை பெற்றுள்ள நாடு.. Read More

peoplenews lka

1860 இல் இலங்கையை உலகில் முன்னிலை நாடாக மாற்றிய மலையக தமிழ் விவசாயிகள்....

1860 இல் இலங்கையை உலகில் முன்னிலை நாடாக மாற்றிய மலையக தமிழ் விவசாயிகள்... Read More

peoplenews lka

எதிர்கால மனித குலத்துக்கு 90 சதவீதம் கடலுணவு!...

உலகில் பறந்து விரிந்துகிடக்கும் சமுத்திரங்களை நம்பி பல லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பெருங்கடலில் இருந்து மனிதனுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் முதல் வாசனைப் பொருட்கள் போன்ற ஆடம்பரப் பண்டங்கள் வரை கிடைக்கப் பெறுகின்றன... Read More